Monday, November 30, 2009

AIDS DAY - December 1

AIDS - Acquired Immuno Deficiency Syndrome

December 1 - World AIDS Day

AIDS insect found in 1981.

Thursday, November 26, 2009

தினங்கள்

ஜனவரி 19 - சர்வதேச மதங்கள் தினம்
ஜனவரி 26 - உலக சுங்க தினம்

ஜனவரி 30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
பிப்ரவரி 2 - புனித வாழ்வுக்கான தினம்
பிப்ரவரி 14 - உலக காதலர் தினம்

பிப்ரவரி 21 - சர்வதேச தாய்மொழிகள் தினம்
மார்ச் 6 - சர்வதேச புத்தகங்கள் தினம்
மார்ச் 8 - சர்வதேச பெண்கள் மற்றும் அமைதி தினம்
மார்ச் 15 - உலக நுகர்வோர் தினம்
மார்ச் 20 - உலக ஊனமுற்றோர் தினம்
மார்ச் 21 - சர்வதேச வன தினம்
மார்ச் 22 - சர்வதேச தண்ணீர் தினம்
மார்ச் 23 - சர்வதேச தட்பவெப்ப நிலை தினம்
மார்ச் 24 - உலக காசநோய் தினம்
மார்ச் 28 - உலக கால்நடை மருத்துவ தினம்
ஏப்ரல் 05 - உலக கடல் தினம்
ஏப்ரல் 07 - உலக சுகாதார தினம்
ஏப்ரல் 12 - உலக வான் பயண தினம்
ஏப்ரல் 15 - சர்வதேச நூலகர்கள் தினம்
ஏப்ரல் 18 - உலக பரம்பரை தினம்
ஏப்ரல் 22 - உலக பூமி தினம்
ஏப்ரல் 30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்
மே 01 - உலக தொழிலாளர் தினம்
மே 03 - உலக சக்தி தினம்
மே 08 - உலக செஞ்சிலுவை தினம்
மே 12 - உலக செவிலியர் தினம்
மே 14 - உலக அன்னையர் தினம்
மே 15 - உலக குடும்ப தினம்
மே 16 - உலக தொலைக்காட்சி தினம்
மே 24 - உலக காமன்வெல்த் தினம்
மே 29 - உலக தம்பதியர் தினம்
மே 31 - உலக புகையிலை மறுப்பு தினம்
ஜுன் 04 - உலக இளம் குழந்தைகள் தினம்
ஜுன் 05 - உலக சுற்றுப்புற தினம்
ஜுன் 15 - சர்வதேச மேஜிக் வித்தை தினம்
ஜுன் 18 - உலக தந்தையர் தினம்
ஜுன் 20 - சர்வதேச அகதிகள் தினம்.
ஜுன் 23 - உலக இறை வணக்க தினம்
ஜுன் 26 - உலக போதை ஒழிப்பு தினம்
ஜுன் 27 - சர்வதேச நீரிழிவு நோய் ஒழிப்பு தினம்
ஜுன் 28 - உலக ஏழைகள் தினம்
ஜீலை 01 - உலக மருத்துவர்கள் தினம்

ஜீலை 11 - உலக மக்கள் தொகை தினம்
ஆகஸ்டு 01 - உலக தாய்ப்பால் தினம்

ஆகஸ்டு 03 - உலக நண்பர்கள் தினம்
ஆகஸ்டு 06 - உலக ஹிரோஷிமா தினம்
ஆகஸ்டு 09 - உலக நாகசாகி தினம்
ஆகஸ்டு 12 - சர்வதேச இளைஞர் தினம்
ஆகஸ்டு 18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்

செப்டம்பர் 08 - உலக எழுத்தறிவு தினம்
செப்டம்பர் 16 - உலக ஓசோன் தினம்
செப்டம்பர் 18 - உலக அறிவாளர் தினம்
செப்டம்பர் 21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
செப்டம்பர் 26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
செப்டம்பர் 27 - உலக சுற்றுலா தினம்
அக்டோபர் 1 - சர்வதேச முதியோர் மற்றும் ரத்ததான தினம்
அக்டோபர் 2 - சர்வதேச அகிம்சை தினம்
அக்டோபர் 4 - உலக விலங்குகள் தினம்
அக்டோபர் 5 - உலக இயற்கைச் சூழல் தினம்

அக்டோபர் 8 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
அக்டோபர் 9 - உலக தபால் தினம்
அக்டோபர் 10 - சர்வதேச மனநல நாள்
அக்டோபர் 16 - சர்வதேச உணவு  தினம்
அக்டோபர் 17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
அக்டோபர் 24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
அக்டோபர் 30 - சர்வதேச சிக்கன நாள்
நவம்பர் 18 - உலக மனநோயாளிகள் தினம்
நவம்பர் 19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
நவம்பர் 26 - சட்ட தினம்
டிசம்பர் 1 - உலக எய்ட்ஸ் தினம்
டிசம்பர் 2 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
டிசம்பர் 3 - சர்வதேச ஊனமுற்றோர் தினம் 
டிசம்பர் 7 - கொடி தினம்
டிசம்பர் 10 - உலக மனித உரிமைகள் தினம்
டிசம்பர் 14 - உலக ஆற்றல் தினம்

Thursday, November 19, 2009

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்

கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடர் விடை வடிவத்தில் இருந்தால், இதற்குரிய சரியான வினாவை கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு வினாவில் இருந்து கண்டுபிடிக்க வேண்டும்.



கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடர் வினா வடிவத்தில் இருந்தால், இதற்குரிய சரியான விடையை கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடையில் இருந்து கண்டுபிடிக்க வேண்டும்.



வினா



வினா ஆறுவகைப்படும்



1. அறிவினா, 2. அறியாவினா, 3. ஐய வினா, 4. கொளல் வினா, 5. கொடை வினா, 6. ஏவல் வினா.



அறிவினா



தான் தெரிந்தவற்றை வேரு ஒருவரிடம் கேட்பது



ஆசிரியர் மாணவரிடம் கேட்பது



திருக்குறளை எழுதியவர் யார்?



அறியா வினா?



தெரியாத ஒன்றை தெரிந்தவரிடம் கேட்டல் மாணவர் ஆசிரியரிடம் கேட்பது



ஐயா, இதன் பொருள் யாது?



ஐய வினா



தமக்கு ஏற்பட்டுள்ள ஐயத்தைப் போக்கிக் கொள்வது



ஐயா, பாரிமுனைச் செல்லும் வழி இதுவா?



கொளல் வினா



ஒன்றினை மற்றவரிடம் கேட்டுப் பெறுதல்



உப்பு உள்ளதா? எனக் கடைக்காரரிடம் கேட்டல்



கொடை வினா



ஒன்றை மற்றவருக்கு கொடுக்கும் பொருட்டு கேட்டல்



காசு வேண்டுமா?



ஏவல் வினா



ஒரு செயலை செய்வதற்காக கேட்கப்படும் வினா



படித்தாயா?



விடை எட்டு வகைப்படும்.



1. கட்டு விடை, 2. மறை விடை, 3. நேர் விடை, 4. ஏவல் விடை, 5. வினா எதிர் வினாதல் விடை, 6. உற்றது உணர்தல், 7. உருவது கூறல் விடை, 8. இனமொழி விடை.



கட்டு விடை



கேட்கப்படும் கேள்விக்கு சுட்டி விடையளிப்பது. பாரிமுனைக்குச் செல்லும் வழி இதுதான்.



மறை விடை



கேட்கப்படும் கேள்விக்கு எதிர்மறைப் பொருளில் விடை இருத்தல்



நீ நீந்துவாயா? நீந்த மாட்டேன்



நேர் விடை



வினவும் வினாவிற்கு உடன்பாட்டு பொருளில் விடையளித்தல்



நாளை அலுவலகம் செல்வாயா? செல்வேன்



ஏவல் விடை



கேட்கப்படும் வினாவிற்கு கேட்பவரையே ஏவுதல்



கடைக்கு செல்வாயா? நீயே செல்



வினா எதிர் வினாதல் விடை



கேட்கப்படும் வினாவிற்கு விடை வினாவாகவே கூறுவது.



நீ தேர்வுக்குப் படித்தாயா? படிக்காமல் இருப்பேனா



உற்றது உரைத்தல் விடை



கேட்கப்படும் வினாவிற்கு தனக்கு உற்றதையே விடையாகக் கூறுதல்



நீ பாடுவாயா? பல் வலிக்கிறது.



உருவது கூறுதல் விடை



கேட்கப்படும் வினாவிற்கு தனக்கு நிகழப் போவதை கூறுவது



எட்டிக்காய் சாப்பிடுகிறாயா? கசக்கும்



இனமொழி விடை



கேட்கப்படும் வினாவிற்கு வேறு ஒரு விடையைக் கூறுவது இனமொழி விடையாகும்



நீ ஆடுவாயா? பாடுவேன்



விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு பசடநஇ வினாத்தாளில் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள்



1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க



சிலப்பதிகாரம் -மணிமேகலை இரட்டைக் காப்பியமாகும்.



அ. இரட்டைக் காப்பியங்கள் யாவை?



ஆ. இரட்டைக் காப்பியத்தை விளக்குக.



இ. இரட்டைக் காப்பியம் பொருள் விளக்கம் தருக.



ஈ. இரட்டைக் காப்பியம் என்று அழைப்பது ஏன்?



2. விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க.



வேத மனத்திற்கு வித்தாவது ஆண்டாள் பாடிய திருப்பாவை ஆகும்.



அ. வேதமனத்திற்கு வித்தாவது எது?



ஆ. திருப்பாவையை எவ்வாறு புகழ்வர்?



இ. திருப்பாவையை எவ்வாறு போற்றுவர்?



ஈ. ஆண்டாள் பாடிய நூலை எவ்வாறு போற்றுவர்?



3. விடைக்கேற்ற வினாத் தொடரை தேர்க.



தமிழின் இனிமையை எவரும் மறுக்க மாட்டார்



அ. தமிழின் இனிமையை எவரே மறுப்பர்?



ஆ. தமிழின் இனிமையை மறுப்பவர் உண்டோ?



இ. தமிழின் இனிமையை மறுப்பவர் யாவர்?



ஈ. தமிழின் இனிமையை மறுப்பவர் இல்லை ஏன்?



4. விடைக்கேற்ற வினாவைத் தேர்க.



உழைத்தவர் உண்ண முடியும்.



அ. எதைச் செய்ய வேண்டும்?



ஆ. யார் உண்ண முடியும்?



இ. உழைத்தவர் உண்ண முடியுமா?



ஈ. உண்ண உழைக்க வேண்டுமா?



5. முருகன் சென்னைக்குச் சென்றான். இதற்கு ஏற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.



அ. முருகன் எதற்கு சென்றான்?



ஆ. முருகன் எங்கு சென்றான்?



இ. முருகன் எப்படிச் சென்றான்?



ஈ. முருகன் யாருடன் சென்றான்?



விடைகள்:

1. A, 2. D, 3. C, 4. B, 5. B.

பெயர்ச் சொல்லின் வகையறிதல்

பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும். எடுத்துக்காட்டு -மரம், செடி, பூ, சூரியன். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.



1. பொருட்பெயர்



பொருளை குறிக்கும் பெயர் பொருட்பெயர். எடுத்துக்காட்டு -மரம், செடி, மின்விசிறி, நாற்காலி.



2. இடப்பெயர்



இடத்தைக் குறிக்கும் பெயர் இடப்பெயர். எ.கா. -உலகம், ஆசியா, இந்தியா, தமிழ்நாடு, சென்னை.



3. சினைப்பெயர்



சினை என்றால் உறுப்பு என பொருள்படும். உறுப்பை குறிக்கும் பெயர் சினைப்பெயர்.



மரம் -பொருட்பெயர். இரை, தண்டு, வேர் போன்றவை அதன் உறுப்புகள். எனவே இவை சினைப்பெயர்கள் ஆகும்.



உடல் -பொருட்பெயர்



கண், காது, மூக்கு, கை என்பவை சினைப்பெயர்கள்.



4. காலத்தை குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.



திங்கள், செவ்வாய், நாள், வாரம், ஆண்டு, காலை, மாலை ஆகியவை காலப்பெயர்கள்.



5. பண்புப் பெயர்



ஒரு பொருளின் பண்பு அல்லது தன்மை அல்லது அதன் குணத்தை குறிப்பது பண்புப்பெயர்.



எடுத்துக்காட்டு -பச்சை இலை, சிவப்பு மை பண்புப்பெயர். உ, கு, றி, று, அம், சி, பு, ஜ, மை, பம், நர் என்ற விகுதியுடன் முடியும் (மை அதிகமாக இடம்பெறும்.)



6. தொழிற்பெயர்



தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர். எ.கா. -படித்தல், ஓடுதல், நடத்தல், தல், அல், அம், ஐ, கை, வை, பு, வு, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆணை, மை, து என்ற விகுதியுடன் முடியும்.



ஓங்குதல், சாக்காடு, வெறுக்கை, தருக்கல், காண்பு, ஒருவுதல், மனம் கவல்வு, செய்கை, இகழ்தல், உணர்வு, கொலல், நந்தம், நீட்டம், ஆண்மை, பெருக்கல், ஒழுக்கு, உண்டி, செய்தல், கொடுமை, உரைத்தல், காண்பு, நல்குரவு, கடத்தல்.



பெயர்ச்சொல்லின் வகையறிதல் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு பசடநஇ வினாத்தாளில் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள்



1. மலர் என்பது



அ. சினைப் பெயர், ஆ. பொருள் பெயர், இ. இடப் பெயர், ஈ. பண்புப் பெயர்



2. பெயர்ச்சொல்லின் வகை அறிக -செம்மை



அ. இடப் பெயர், ஆ. பண்புப் பெயர்,



இ. சினைப் பெயர், ஈ. தொழிற் பெயர்



3. பெயர்ச் சொல்லின் வகை அறிக -நல்லன்



அ. இடப் பெயர், ஆ. சினைப் பெயர்,



இ. குணப் பெயர், ஈ. தொழிற் பெயர்



4. பெயர்ச்சொல்லின் வகையறிக -மதுரை



அ. சினைப் பெயர், ஆ. பொருட் பெயர்,



இ. குணப் பெயர், ஈ. இடப் பெயர்



5. செய்தல் என்பது



அ. பொருட் பெயர், ஆ. சினைப் பெயர்,



இ. தொழிற் பெயர், ஈ. பண்புப் பெயர்



6. பின்வரும் பெயர்ச் சொல்லின் எவ்வகை எனக் குறிப்பிடுக -வற்றல்



அ. பொருட் பெயர், ஆ. இடப்பெயர்,



இ. தொழிற்பெயர், ஈ. சினைப் பெயர்



7. பெயர்ச்சொல்லின் வகையறிக -ஊதியம்



அ. பொருட்பெயர், ஆ. சினைப்பெயர்,



இ. குணப் பெயர், ஈ. காலப்பெயர்



8. உலகம் என்ற பெயர்ச்சொல்லின் வகை தேர்க.



அ. காலப்பெயர், ஆ. பொருட்பெயர்,



இ. இடப்பெயர், ஈ. சினைப் பெயர்



9. பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்க -பணிவு



அ. காலப்பெயர், ஆ. இடப்பெயர்,



இ. சினைப்பெயர், ஈ. தொழிற்பெயர்



10. பெயர்ச்சொல்லின் வகை தெளிக -தோள்



அ. தொழிற்பெயர், ஆ. சினைப்பெயர்,



இ. காலப்பெயர், ஈ. பொருட்பெயர்



விடைகள்:

1. A, 2. B, 3. C, 4. D, 5. C, 6. C, 7. A, 8. C, 9. D., 10. B

பிறமொழிச் சொற்களை நீக்குதல்

தமிழ் அல்லாத பிறமொழியில் உள்ள சொற்கள் கலந்த மூன்று தொடர் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் எது நல்ல தமிழில் அமைந்த தொடர் என கண்டுபிடித்தலே இப்பகுதியாகும். பிறமொழியில் உள்ள சில சொற்களும் அவற்றிற்கு உரிய தமிழ்ச் சொற்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



ஆங்கிலச் சொற்கள்: தமிழ்ச் சொற்கள்


ஹேர்கட்டிங் சலூன் – முடிதிருத்தகம்



ஹோட்டல் – உணவகம்



மெடிக்கல் ஷாப் – மருந்தகம்



கிளாத் ஸ்டோர்ஸ் – துணியங்காடி



பஸ் ஸ்டாண்டு – பேருந்து நிலையம்



லேட் – காலம் கடந்து



மீட்டிங் – கூட்டம்



இம்ப்ரூ – பெருக்கு



பஸ் ஸ்டாப் – பேருந்து நிறுத்தம்



கம்பெனி – குழுமம்



இண்டஸ்ட்ரி – தொழிலகம்



டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் – தட்டெழுத்துப் பயிலகம்



ஸ்டேஷனரி ஷாப் – எழுதுபொருள் அங்காடி



காபி பார் – குளம்பியகம்



டீ ஸ்டால் – தேநீர் அங்காடி



பிரிண்டிங் பிரஸ் – அச்சகம்



ஸ்கூல் – பள்ளிக்கூடம்



ஆஸ்பிடல் – மருத்துவமனை



டெலிபோன் – தொலைபேசி



கம்ப்யூட்டர் – கணினி



டிஸ்க் – குறுந்தகடு



டாக்டர் – மருத்துவர்



டீப் போர் வெல் – ஆழ்துளைக் கிணறு



டைம் – நேரம், மணி



நாலெட்ஜ் – அறிவு



பஸ் – பேருந்து



ஹாஸ்டல் – விடுதி



போஸ்ட் ஆபீஸ் – அஞ்சல் நிலையம்



போலீஸ் ஸ்டேஷன் – காவல் நிலையம்



சிட்டி – நகரம்



வோல்டு – உலகம்



கண்ட்ரி – நாடு



ரிவர் – நதி



பர்ஸ்ட் கிளாஸ் – முதல் வகுப்பு



சூப்பர் – சிறப்பு



ஸ்பெஷல் – தனி



பேரண்ட்ஸ் – பெற்றோர்



பிளே கிரவுண்ட் – விளையாட்டுத்திடல்



அட்மிஷன் – சேர்க்கை



ஏஜென்ஸி – முகவாண்மை



ஆக்ஸிடெண்ட் – நேர்ச்சி



ஜெராக்ஸ் – ஒளிப்படி



ஆடியோகேசட் – ஒலிப்பேழை



விடியோகேசட் – ஒளிப்பேழை



டைப்பிஸ்ட் – தட்டச்சர்



பிளாட்பாம் – நடைபாதை



பிளாஸ்டிக் – நெகிழி



நோட்புக் – குறிப்பேடு



லாரி – சரக்குந்து



லாண்டரி – வெளுப்பகம்



எவர்சில்வர் – நிலைவெள்ளி



அட்டெண்டன்ஸ் – வருகைப்பதிவு



ஆட்டோமொபைல் – தானியங்கி



பைண்டிங் – கட்டமைப்பு



கேபிள் – கம்பிவடம்



செக் – காசோலை



லைன் – வரிசை



சக்ஸஸ் – வெற்றி



ரெயின் வாட்டர் ஹார்வெஸ்ட் – மழைநீர் சேகரிப்பு



பாஸ் – தேர்ச்சி



டிரை – முயற்சி



பேமிலி – குடும்பம்



ஸ்மால் – சிறிய

18. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.




மெட்ராஸ் சிட்டிக்கு செல்லவேண்டும்.



அ. மதராஸ் சிட்டிக்கு செல்ல வேண்டும்.



ஆ. சென்னைப் பட்டணத்திற்கு



இ. சென்னை சிட்டிக்கு



ஈ. சென்னை நகரத்திற்கு



19. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.



ஆஸ்பத்திரிக்குச் சென்று டெஸ்ட் செய்துவா



அ. ஆஸ்பத்திரிக்குச் சென்று உடல்நிலையை டெஸ்ட் செய்துவா



ஆ. ஆஸ்பத்திரிக்குச் சென்று உடல்நிலையைச் சோதனை செய்து வா



இ. மருத்துவமனைக்குச் சென்று உடல்நிலையை சோதனை செய்து வா



ஈ. மருந்து அகத்திற்குச் சென்று உடல்நிலையை சோதனை செய்து வா



20. தொடரில் உள்ள ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லைக் குறிப்பிடுக.



கந்தன் தொழிலில் டெவலப் அடைந்தான்



அ. முன்னேற்றம், ஆ. பின்நிலை,



இ. உயர்ந்த நிலை, ஈ. வளரும் நிலை



21. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.



ரெகுலர் அட்டெண்டன்ஸ் தேவை



அ. விருப்பத்துடன் வருகை தேவை



ஆ. ஒழுங்கான வருகை தேவை



இ. கவனத்துடன் வருகை தேவை



ஈ. குறைவு இல்லா வருகை தேவை



22. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைக் குறி



மெடிக்கல் ஷாப் போனேன்



அ. மருந்து ஷாப் போனேன்



ஆ. மருந்துக் கடைக்குப் போனேன்.



இ. ஷாப் கடைக்குப் போனேன்



ஈ. மெடிக்கல் வாங்கப் போனேன்



23. ஐடன்டிபிகேஷன் சர்டிபிகேட் -இச்சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல் தருக.



அ. ஆளறி மனு, ஆ. ஆளறி சான்றிதழ்,



இ. அடையாள அட்டை, ஈ. அடையாளச் சீட்டு



24. கலெக்டர் என்ற சொல்லிற்கு சரியான தமிழ்ச் சொல் தருக.



அ. ஆட்சியர், ஆ. வட்டாட்சியர்,



இ. சேகரிப்பவர், ஈ. கோட்டாட்சியர்

25. ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லில் வட்டமிடுக



நூற்றுக்குச் சேஞ்ச் இருக்குமா?



அ. சில்லறை, ஆ. சில்லரை, இ. மாற்றம், ஈ. துண்டு



26. ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லில் வட்டமிடுக.



கவுண்டிங் என்றைக்கு?



அ. சரிபார்ப்பு, ஆ. பெருவேலை,



இ. எண்ணிக்கை, ஈ. பதிவு


விடைகள்:

18. D, 19. C, 20. A, 21. B, 22. B, 23. B, 24. A, 25. C, 26. C


21. உவமையால் விளக்கப் பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்க.




அ. துரோகம், ஆ. அழிவு, இ. ஆக்கம்,



ஈ. கடமையின்மை



22. பிறமொழிச் சொல் கலவாத வழு இல்லாத தொடரைக் கண்டு வட்டமிடுக.



அ. வருசக் கடைசி, ஆ. வருடக் கடைசி



இ. வருஷக் கடைசி, ஈ. ஆண்டுக் கடைசி



23. பிறமொழிச் சொல் இல்லாத தொடரைக் கண்டு வட்டமிடுக.



அ. கும்பாபிஷேகம், ஆ. குடஅபிசேகம்,



இ. குடம் அபிஷேகம், ஈ. குடமுழுக்கு



24. பிறமொழிச் சொற்களை நீக்குக.



அ. தினசரி உடல் பயிற்சி செய்



ஆ. நாள்தோறும் உடற்பயிற்சி செய்



இ. தினமும் உடற்பயிற்சி செய்



ஈ. தினமும் உடல் பயிற்சி செய்



25. பிறமொழிச் சொற்களை நீக்குக.



அ. விஷயம், ஆ. ஹாஸ்டல், இ. ஆஸ்தி, ஈ. செய்தி



26. பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் எது?



அ. ஆஸ்தி, விஷயம், ஹாஸ்டல்



ஆ. சொத்து, விஷயம், ஹாஸ்டல்



இ. சொத்து, செய்தி, விடுதி



ஈ. சொத்து, செய்தி, ஹாஸ்டல்



27. பிறமொழிச் சொல்லை நீக்குக.



பிள்ளையார் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.



அ. பிள்ளையார் கோயிலுக்கு கும்பாபிஷேகம்



நடந்தது



ஆ. பிள்ளையார் கோயிலுக்கு ஆராதனை நடந்தது



இ. பிள்ளையார் கோயிலுக்கு திருவிழா நடந்தது



ஈ. பிள்ளையார் கோயிலுக்கு நீராட்டு விழா நடந்தது.



விடைகள்: 21. அ, 22. ஈ, 23. ஈ, 24. ஆ, 25. ஈ, 26. இ. 27. ஈ.

எதிர்ச்சொல்லைக் கண்டறிதல்

தமிழில் ஒரு சொல்லுக்குரிய எதிர்ப்பதம் எழுதுவதைத்தான் இப்பகுதியில் கேள்வியாக கேட்கப்படுகின்றது. சில முக்கியமான தமிழ்ச் சொற்களுக்குரிய எதிர்ப்பதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை நன்கு படித்துக் கொள்ளவும். இப் பகுதியில் இருந்து ஒன்று அல்லது இரண்டு வினாக்கள் உறுதியாக கேட்கப்படுகின்றது. இப்பகுதி எளிதில் மதிப்பெண் பெற உதவக்கூடிய பகுதி.



ஆடவர் – பெண்டிர்



அழித்தல் – ஆக்கல்



அண்மை – தொலைவு, சேய்மை



அரிய – எளிய



அடிமை – சுதந்திரம்



அடி – நுனி



அன்பு – பகை



அற்றை – இற்û



ஆகும் – ஆகாது



அன்பான – அன்பற்ற



அடைத்தல் – திறத்தல்



அகம் – புறம்



அன்றே – இன்ú



அறப்போர் – மறப்போர்



அமைதி – ஆரவாரம்



அளித்தார் – பறித்தார்



அமர்ந்து – எழுந்து



அல்லும் – பகலும்



அற்றகுளம் – அறாதகுளம்



இன்பம் – துன்பம்



இனிய – இன்னாத



இழிவு – உயர்வு



இணை – பிரி



இடம் – வலம்



இளமை – முதுமை



இயற்கை – செயற்கை



இறுதி – தொடக்கம்



இன்சொல் – புன் சொல், கொடுஞ்செயல்



இம்மை – மறுமை



இளமை – முதுமை



இன்னா – இனிய



இல்லை – உண்டு



இழப்பு – ஆதாயம்



இரவு – பகல்



உயர்வு – தாழ்வு



உறங்கு – விழி



உண்மை – பொய்மை



உரிமை – அடிமை



உடன்பாடு – மாறுபாடு



உற்றுழிவு – உறாவுழி



உள்ளரங்கம் – வெளியரங்கம்



உத்தமர் – அதமர்



உள்பொருள் – வெளிப்பொருள்



ஒற்றுமை – வேற்றுமை



ஏற்றம் – இறக்கம்



நிறை – குû



மலர்தல் – கூம்பல், குவிதல்



மிகுதி – குறைவு



முதுகலை – இளங்கலை



தண்மை – வெம்மை



வெற்றமை – இழந்தமை



தட்பம் – எளிமை



புகழ்ச்சி – இகழ்ச்சி



பிரிந்து – சேர்ந்து



பலர் – சிலர்



பாவம் – புண்ணியம்



பழி – புகழ்



பழமை – புதுமை



பல – சில



புதிய – பழைய



பற்பல – சிற்சில



பள்ளம் – மேடு



பழம் – காய்



புதுமை – பழமை



பழம்பாடல் – புதுப்பாடல்



பின்னர் – முன்னர்



பிரிக்கலாம் – சேர்க்கலாம்



பிழை – திருத்தம்



பெருந்தொகை – சிறுதொகை

செலவு- வரவு




சோம்பல்- சுறுசுறுப்பு



விழைந்தார்- வெறுத்தார்



சிற்றூர்- பேரூர்



பெருமை- சிறுமை



விருப்பு- வெறுப்பு



வென்று- தோற்று



பெருகி- சுருங்கி



சிற்றாறு- பேராறு



நீதி- அநீதி



எளிது- அரிது



பெரியவர்- சிறியவர்



குழு- தனி



நண்பன்- பகைவன்



கூடி- பிரிந்து



வெற்றி- தோல்வி



வெளியே- உள்ளே



மேலே- கீழே



கேடு- நலம்



முன்- பின்



வேறுபாடு- ஒருமைப்பாடு



தூய்மை- மாசு



சிற்றரசர் – பேரரசர்



வளர்ச்சி- தளர்ச்சி



தொன்மை- அண்மை



குடியரசு – முடியரசு



மகிழ்ச்சி- வருத்தம்



மகிழ்ச்சி- துயரம்



பிறந்தார்- மறைந்தார்



மூத்த- இளைய



தொடக்கம்- முடிவு



ஒழுங்காக- ஒழுங்கின்றி



தந்தை- தாய்



மகன்- மகள்



நம்பி- நங்கை



குமரன்- குமரி



தூயன்- வீராங்கனை



கீழைநாடு- மேலை நாடு



எழுச்சி- வீழ்ச்சி



எளிய- அரிய



மற- நினை



தோன்று- மறைய



செய்வோம்- செய்யோம்



முதன்மை- இறுதி



ஓங்கிய- தாழ்ந்த



எட்டிய- எட்டா



நட்பு- பகை



நன்மை- தீமை



செம்மை- கருமை



நண்பர்- பகைவர்



காலை- மாலை



செல்வர்- ஏழை



ஏறி- இறக்கி



வேண்டும்- வேண்டாம்



வாழ்த்தல்- தூற்றல்



சிறியவர்- பெரியவர்



தலைவர்- தொண்டர்



ஒன்று- பல



நீண்ட- குறுகிய



தீது- நன்று



பொய்- மெய்



தவறு- சரி



முடியும்- முடியாத



திண்மம்- நீர்மம்



குழி- மேடு



வளைத்தல்- நிமிர்த்தல்



வடக்கு- தெற்கு



வடநாடு- தென்னாடு



வரவு- செலவு



வாடுதல்- தழைத்தல்



வாழ்வு- தாழ்வு



பல்வேறு பசடநஇ பொதுத் தமிழ் வினாக்களில் எதிர்ச்சொல்லை கண்டறிக என்ற தலைப்பின் கீழ் கேட்கப்பட்ட வினாக்கள் பின் வருமாறு.



1. களிப்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல் தேர்க.



அ. கோபம், ஆ. எரிச்சல்,



இ. மகிழ்ச்சி, ஈ. துயரம்



2. பகைவன் என்ற சொல்லின் எதிர்ச்சொல் தேர்க.



அ. நல்லவன், ஆ. நண்பன்,



இ. எதிரி, ஈ. வல்லவன்



3. எதிர்ச்சொல் தருக -இசை



அ. வசை, ஆ. ஞானம்,



இ. புகழ், ஈ. பெருமை



4. எதிர்ச்சொல் தருக -தண்மை



அ. தட்பம், ஆ.மழை,



இ. வெம்மை, ஈ.குளிர்



5. எதிர்ச்சொல் தருக -நன்மை



அ. பகை, ஆ. வெறுப்பு,



இ. தீமை, ஈ. இன்மை



6. எதிர்ச்சொல் தருக -நிû



அ. எடை, ஆ. வெறுப்பு,



இ. தடை, ஈ. குû



7. இனிய என்ற சொல்லின் எதிர்ச்சொல் தேர்க.



அ. நல்ல, ஆ. இடரான,



இ. இன்னாத, ஈ. இன்பமான



8. கனி என்ற சொல்லின் எதிர்ச்சொல் தருக.



அ. நனி, ஆ. பனி, இ. காய்,



ஈ. பழம்



9. நன்மை இச்சொல்லின் எதிர்ச்சொல் தருக.



அ. தீமை, ஆ. உண்மை,



இ. வன்மை, ஈ. தூய்மை



10. வெப்பம் என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல் தருக.



அ. தண்மை, ஆ. அழை,



இ. மிதம், ஈ. பனி

வேர்ச்சொல்லை தேர்வு செய்தல்

ஒரு சொல்லை கொடுத்துவிட்டு அதற்குரிய முதனிலை அல்லது பகுதியை அல்லது வேர்ச்சொல்லை கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளில் ஒன்றினைத் தேர்வு செய்தலே இப்பகுதியாகும். மிக எளிமையான பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இப்பகுதியில் உறுதியாக ஒன்று அல்லது இரண்டு வினாக்களும் இதை தொடர்புபடுத்தி ஒன்று அல்லது இரண்டு வினாக்கள் கேட்கப்படும்.




வேர்ச்சொல்



வேர்ச்சொல் என்றால் தர்ர்ற் என பொருள்படும்.



வேர்ச்சொல்லை பிரிக்க முடியாது



எந்த ஒரு சொல்லையும் ஏவல் அல்லது கட்டளையாக மாற்றினால் வருவது வேர்ச்சொல்.



சொற்கள்



வேர்ச் சொல்



கண்டான்



நாடினான்



போகின்றான்



வென்றான்



தேடினான்



பாடுவாள்



ஓடுகிறான்



செல்வான்



அறிந்தான்



நடந்தான்



நடித்தான்



எழுதினான்



பார்த்தான்



பருகினான்



சென்றான்



கூவினான்



பணிந்தான்



உண்டான்



-காண்



- நாடு



- போ



- வெல்



- தேடு



- பாடு



- ஓடு



- செல்



- அறி



- நட



- நடி



- எழுது



- பார்



- பருகு



- செல்



- கூவு



- பணி



- உண்



காண், உடை, பூசு, பிள, படு, எடு, ஓது, உழு, எழு, வா, போ போன்றவை வேர்ச் சொற்களாகும்.



வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு பசடநஇ வினாத்தாளில் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள்



1. வேர்ச்சொல்லைத் தேர்க -வெந்த



அ. வே, ஆ. வெகு, இ. வெந்து, ஈ. வேதல்



2. வேர்ச்சொல்லைத் தேர்க -செத்தது



அ. செத்து, ஆ. செத்த, இ. சே, ஈ. சா



3. வேர்ச்சொல்லைத் தேர்க செய்க -போகின்றான்



அ. போனான், ஆ. போனாள், இ. போகின்றன, ஈ. போ



4. வினைச்சொல்லிற்குரிய சரியான வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -உண்டான்



அ. உண்ட, ஆ. உண்ணும், இ. உண், ஈ. உண்டு



5. வினைச் சொல்லிற்குரிய சரியான வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -வந்தான்



அ. வந்த, ஆ. வா, இ. வந்து, ஈ. வருக.



6. வேர்ச் சொல்லைத் தேர்க -கற்றான்



அ. கல், ஆ. காண், இ. கற்றான், ஈ. கற்றது



7. வினைச் சொல்லிற்குரிய சரியான வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -ஓடினான்



அ. ஓடுதல், ஆ. ஓடின, இ. ஓடு, ஈ. ஓடுக



8. வேர்ச்சொல் அல்லது முதனிலையைக் குறிப்பிடுக -தருகின்றான்



அ. தரும், ஆ. தரு, இ. தா, ஈ. தருக.



9. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க (பகுதியை) -செல்வான்



அ. சென்ற, ஆ. செல், இ. சென்று, ஈ. செல்கி



10. வேர்ச்சொல்லைத் தேர்க -நொந்தான்



அ. நொ, ஆ. நோ, இ. நொவு, ஈ. நொண்டு



11. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -படித்தான்



அ. படித்த, ஆ. படித்து, இ. படி, ஈ. படித்தல்



12. வேர்ச்சொல்லை தேர்க -கண்டு



அ. கண், ஆ. காண்கு, இ. காண், ஈ. காண்க



13. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -வந்தான்



அ. வ, ஆ. வந்து, இ. வந், ஈ. வா



14. வேர்ச்சொல் அறிந்து எழுதுக -கண்டு



அ. காண், ஆ. கண், இ. காண்க, ஈ. காணல்



15. வேர்ச்சொல்லை கண்டுணர்ந்து குறிக்க -பாடிய



அ. பாடு, ஆ. பா, இ. பண், ஈ. பாடி



16. சென்றன -என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்க



அ. சென், ஆ. சென்ற, இ. சென்று, ஈ. செல்



17. கற்றவர் -என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க



அ. கற்க, ஆ. கள், இ. கற்று, ஈ. கல்



18. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -நின்றார்



அ. நில், ஆ. நின், இ. நின்ற, ஈ.நின்று



19. நடக்கின்றான் என்றச் சொல்லின் சரியான வேர்ச்சொல்லைத் தேர்க



அ. நடந்தன, ஆ. நட, இ. நடந்தான், ஈ. நடந்து



20. சென்றான் என்றச் சொல்லின் வேர்ச்சொல் எது?



அ. சென்று, ஆ. செல்லு, இ. செல், ஈ. செல்லுதல்



21. படித்தான் என்றச் சொல்லின் வேர்ச்சொல் எது?



அ. படிர், ஆ. படித்து, இ. படிக்கு, ஈ.படி



22. தந்தான் என்றச் சொல்லின் வேர்ச்சொல் எது?



அ. தன், ஆ. தா, இ. தருக, ஈ. தந்து



23. கீழ்க்காண் சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டு வட்டமிடுக -வருக



அ. வா, ஆ. வாழ்தல், இ. வாழ்வு, ஈ. வாழ்க்கை



24. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -சொல்… கெட்டான்



அ. கேடு, ஆ. கெடு, இ. கெட்ட, ஈ. கெட்டு



25. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க சொல் -நின்றான்



அ. நில், ஆ. நின், இ. நின்று, ஈ. நின்



26. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -சொல் -கண்டான்



அ. கண், ஆ. கண்டு, ஈ. கண்ட, ஈ. காண்



விடை:



1. C, 2. C, 3. D, 4. C, 5. B, 6. A, 7. C, 8. D, 9. B, 10. A, 11. C, 12. C, 13. D, 14. A, 15. A, 16. D, 17. D, 18. A, 19. B, 20. C, 21. D, 22. B, 23. A, 24. B, 25. A, 26. D.

ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரியப் பொருளைக் கண்டறிதல்

தமிழில் மொத்தம் 246 எழுத்துகளில் 42 எழுத்துகளுக்கு தனியே பொருள் உண்டு. இந்த 42 எழுத்துகளுக்குரியப் பொருளை கண்டுபிடித்தலே இப்பகுதியில் கேட்கப்படும் கேள்வியாகும். 42 எழுத்துகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


42 எழுத்துகளின் விவரமும் அதன் அகராதி பொருட்களும் பின்வருமாறு:


1. உயிர் இனம் 6



ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ



ஆ -பசு, எருது, ஆச்சா மரம்



ஈ -பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு



ஊ -இறைச்சி, உணவு, விகுதி



ஏ -அம்பு, எய்யும் தொழில், இறுமாப்பு, அடுக்கு



ஐ -அழகு, ஐந்து, ஐயம், அசை, தலைவன், அரசன்



ஓ -சென்று தாக்குதல், மதகு நீர், ஒழிவு, தங்கும் பலகை



2. ம இனம் 6



மா, மீ, மூ, மே, மை, மோ



மா -பெரிய, நிலம், விலங்கு, மாமரம்



மீ -மேலே, ஆகாயம், மேன்மை, உயர்வு



மூ -மூப்பு (முதுமை), மூன்று



மே -மேல், மேன்மை



மை -கண் மை (கருமை), இருள், செம்மறி ஆடு, அஞ்சனம்



மோ -முகர்தல்



3. த இனம் 5



தா, தீ, தூ, தே, தை



தா -கொடு, குறை, கேடு, குற்றம், பகை



தீ -நெருப்பு, இனிமை, அறிவு, இடம்



தூ -வெண்மை, இறைச்சி, பறவை இறகு



தே -கடவுள்



தை -தமிழ் மாதம், தையல், திங்கள்



4. ப. இனம் 5



பா, பூ, பே, பை, போ



பா -அழகு, பாட்டு, நிழல்



பூ -மலர், சூதகம்



பே -அச்சம், நுரை, வேகம்



பை -கைப்பை, பாம்பு படம், கொள்கலம், பசுமை



போ -செல்



5. ந இனம் 5



நா, நீ, நே, நை, நோ



நா -நாக்கு, தீயின் சுவாலை



நீ -நீ



நை -வருந்து, இகழ்ச்சி



நோ -நோவு, துன்பம், வலி



6. க இனம் 4



கா, கூ, கை, கோ



கா -சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, சரஸ்வதி, தோட்டம்



கூ -பூமி, ஏவல், கூழ், கூவு



கை -உறுப்பு, ஒப்பனை, செயல், துதிக்கை, படை, கைப்பொருள், கைமரம்



கோ -வேந்தன், தலைவன், இறைவன், அரசன்



7. வ இனம் 4



வா, வீ, வை, வெü



வா- வருகை



வீ -மலர், பூ, மகரந்தம், அழிவு, சாவு



வை -வைக்கவும், வைக்கோல், கூர்மை, வையம்



வெü -வவ்வுதல் (அ) கெüவுதல் (ஒலிக்குறிப்பு)



8. ச இனம் 4



சா, சீ, சே, சோ



சா -சாதல், சோர்தல், பேய், மரணம்



சீ -வெறுப்புச் சொல் (அ) சீத்தல், சீழ், சளி, இலக்குமி, அடக்கம், நித்திரை



சே -சிவப்பு, எருது, அழிஞ்சல் மரம்



சோ -மதில், அரண்



9. யா -1



யா -ஒருவகை மரம், யாவை, அசைச் சொல்



10. நொ -1



நொ -வருந்து, நோய், மென்மை, துன்பம், நொய்வு



11. து -1



து -உண், விகுதி, நடத்தல், உணவு, வகுத்தல்



ஆக ஓரெழுத்து ஒரு மொழி மொத்தம் 42 ஆகும்,

ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிதல் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு வினாத்தாளில் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள்




1. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறில் -கா



அ. சோலை, ஆ. குயில், இ. கத்துதல், ஈ. மயில்



2. ஓரெழுத்து ஒரு மொழியில் உரிய பொருளைத் தேர்க -ஏ



அ. கருவி, ஆ. பொருள், இ. அம்பு, ஈ. எழுத்து



3. ஓரெழுத்து ஒரு பொருளியில் உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க -வா



அ. வருதல், ஆ. வந்த, இ. வந்து, ஈ. வருக



4. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல் -ஆ



அ. பேசுதல், ஆ. கோயில், இ. விலங்கு, ஈ. பசு



5. மா என்பதன் பொருள்



அ. மாதிரி, ஆ. வீசிய, இ. சிறிய, ஈ. பெரிய



6. வீ என்பதன் பொருள்



அ.மலர், ஆ. சிலர், இ. பலர், ஈ. களர்



7. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளை எழுது -வீ



அ. காய், ஆ. கனி, இ. மலரா மொட்டு, ஈ. பூ



8. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறிப்பிடுக -பா



அ. பாடல், ஆ. அழைத்தல், இ. கத்துதல், ஈ. ஒலி



9. ஏ என்னும் எழுத்து குறிக்கும் பொருள்



அ. வாள், ஆ. வேல், இ. அம்பு, ஈ. பொருள் இல்லை



10. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல் -ஆ



அ. காளை, ஆ. பசு, இ. எருமை, ஈ. வியப்பு



11. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிக -ஈ



அ. ஓர் எழுத்து, ஆ. கொடு, இ. உயிர், ஈ. இளித்தல்



12. ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை அறிக -தீ



அ. தீய்த்தல், ஆ. தீமிதி, இ. நெருப்பு, ஈ. வெப்பம்



13. கா என்னும் ஓரெழுத்தொரு மொழிக்குரிய பொருள் யாது?



அ. காசு, ஆ. சோலை, இ. மாடு, ஈ. காலம்



14. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்க -தூ



அ. செம்மை, ஆ. பசுமை, இ. கருமை, ஈ. வெண்மை



15. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தெளிக -கா



அ. சோலை, காகம்; ஆ. பூ, காவல்; இ. தோப்பு, காக்கை; ஈ. சோலை, காப்பாற்று



16. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் குறிப்பிடுக -சா



அ. இறந்து போதல், ஆ. நடத்தல் இ. ஓடுதல், ஈ. குதித்தல்



17. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்க -போ



அ. பேசுதல், ஆ. வைத்தல், இ. செல்லுதல், ஈ. கொடுத்தல்



18. ஓரெழுத்து ஒரு மொழியில் உரிய பொருள் தரும் தொடரைத் தேர்வு செய்க -கை



அ. செய்கை, ஆ. ஓர் உறுப்பு, இ. சேர்க்கை, ஈ. வாழ்க்கை



19. ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைக் கண்டறிக -பூ



அ. மலர், ஆ. மல்லிகை, இ. முல்லை, ஈ. மணம்



20. கா என்ற ஓரெழுத்தின் பொருள் என்ன?



அ. காக்கை, ஆ. சோலை, இ. குயில், ஈ. தோட்டம்



21. தா என்ற ஓரெழுத்தின் பொருள் என்ன?



அ. காடு, ஆ. கொடு, இ.பாடு, ஈ. தேடு



22. ஐ என்ற எழுத்தின் பொருள்



அ. தலைவன், ஆ. உருபு, இ. தகுதி, ஈ. மந்திரம்



23. மா என்ற ஓரெழுத்தின் பொருள் என்ன?



அ. பாடல், ஆ. மாண்பு, இ. பெரிய, ஈ. அறிவு



24. கீழ்க்காண் சொல்லின் பொருளைக் கண்டு வட்டமிடுக -ஈ



அ. கொடு, ஆ. கெடு, இ. ஏசு, ஈ. எடு



25. கீழ்க்காண் சொல்லின் பொருளைக் கண்டு வட்டமிடுக -பா



அ. பார், ஆ. கேள், இ. ஓடு, ஈ. பாட்டு



26. ஓரெழுத்து ஒரு மொழிக்கு உரிய பொருளை அறிக -கா



அ. காத்தல், ஆ. காக்கை, இ. சோலை, ஈ. பொய்கை



விடைகள்:- 1) A, 2) C, 3) D, 4) D, 5) D, 6) A, 7) D, A. 9) C, 10) B, 11) B, 12) C, 13) B, 14) D, 15) D, 16) A, 17) C, 18) B, 19) A, 20) B, 21) B, 22) A, 23) C, 24) A, 25) D, 26) C

தமிழ் இலக்கியம்

சங்க இலக்கியம்

அகத்தியம்
தொல்காப்பியம்

பதினெண் மேற்கணக்கு
1) எட்டுத்தொகை
2) பத்துப்பாட்டு
  எட்டுத்தொகை

1) ஐங்குறுநூறு

2 )அகநானூறு

3) புறநானூறு

4) கலித்தொகை

5) குறுந்தொகை

6) நற்றிணை

7) பரிபாடல்

8) பதிற்றுப்பத்து

பத்துப்பாட்டு

1) திருமுருகாற்றுப்படை

2) குறிஞ்சிப் பாட்டு

3) மலைபடுகடாம்

4) மதுரைக் காஞ்சி

5) முல்லைப்பாட்டு

6)நெடுநல்வாடை

7) பட்டினப் பாலை

8) பெரும்பாணாற்றுப்படை

9) பொருநராற்றுப்படை

10) சிறுபாணாற்றுப்படை

பதினெண் கீழ்க்கணக்கு

1) நாலடியார்

2) நான்மணிக்கடிகை

3) இன்னா நாற்பது

4) இனியவை நாற்பது

5) கார் நாற்பது

6) களவழி நாற்பது

7) ஐந்திணை ஐம்பது

8) திணைமொழி ஐம்பது

9) ஐந்திணை எழுபது

10) திணைமாலை நூற்றைம்பது

11) திருக்குறள்

12) திரிகடுகம்

13) ஆசாரக்கோவை

14) பழமொழி நானூறு

15) சிறுபஞ்சமூலம்

16) முதுமொழிக்காஞ்சி

17) ஏலாதி

18) கைந்நிலை 

உலக டாய்லெட் தினம் - November 19


Wednesday, November 18, 2009

ரத்தவங்கி தொலை பேசி எண்கள்

Ramachandra 24768017
Apollo 28294870
Cancer Hospital 22350241
Child Trust 42001800
Devaki Hospital 24992669
Jeenvan Blood Bank 28351200

சமத்துவபுரம்

தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் மதுரை மாவட்டத்தில் உள்ள மேலகோட்டை கிராமத்தில் 17-08-1998 இல் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் இதுவரை 145 சமத்துவபுரங்கள் உள்ளன.

2008-09 ஆம் ஆண்டில் 29 சமத்துவபுரங்கள் அமைக்க ரூ 75 கோடி தமிழக அரசால் செலவழிக்கப்பட்டது .

இதே போன்று 2009-10 ஆம் ஆண்டிற்கும் 29 சமத்துவபுரங்கள் அமைக்க ரூ 75 கோடி ஒதுக்கப்பட்டது .

சமத்துவபுர குடியிருப்பு ஒதுக்கீடு வகுப்பு வாரியாக
தாழ்த்தபட்டோர் நாற்பது வீடுகள்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இருப்பத்து aஞ்சு வீடுகள்
பிற்படுத்தப்பட்டோர் இருப்பது அஞ்சு வீடுகள்
மற்றவர்கள் பத்து வீடுகள்

மத்திய அமைச்சரவை

கேபினட் அமைச்சர்கள்

1.மன்மோகன்சிங் - பிரதமர்

2.பிரணாப் முகர்ஜி - நிதி

3.ஷரத் பவார் - வேளாண்மை

4.ஏ.கே.அந்தோணி - பாதுகாப்பு

5.ப.சிதம்பரம் - உள்துறை

6.மம்தா பானர்ஜி - ரயில்வே

7.எஸ்.எம்.கிருஷ்ணா - வெளியுறவு

8.குலாம் நபி ஆசாத் - சுகாதாரம், குடும்ப நலம்

9.சுஷீல் குமார் ஷிண்டே - மின்சாரம்

10.எம்.வீரப்ப மொய்லி - சட்டம், நீதி

11.எஸ்.ஜெய்பால் ரெட்டி - நகர்ப்புற மேம்பாடு

12.கமல் நாத் - தரைவழிப் போக்குவரத்து

13.வயலார் ரவி - வெளிநாடு வாழ் இந்தியர் நலம்

14.முரளி தியோரா - பெட்ரோலியம்

15.கபில் சிபல் - மனிதவள மேம்பாடு

16.அம்பிகா சோனி - தகவல் ஒளிபரப்பு

17.பி.கே.ஹண்டிக் - சுரங்கம், வடகிழக்கு மாநில மேம்பாடு

18.ஆனந்த் ஷர்மா - வர்த்தகம், தொழில்துறை

19.சி.பி.ஜோஷி - கிராம மேம்பாடு

20.வீரபத்ரசிங் - உருக்குத் துறை

21. விலாஸ்ராவ் தேஷ்முக் - கனரக தொழில் துறை

22. பரூக் அப்துல்லா - புதுப்பிக்கப்பட்ட எரிசக்தித்துறை

23. தயாநிதி மாறன் - ஜவுளி

24. ஆ.ராசா - தொலைத் தொடர்பு, தகவல் தொழில் நுட்பம்

25. மல்லிகார்ஜூனே கார்கே - தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு

26. குமாரி செல்ஜா - வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு, சுற்றுலா

27. சுபோத்காந்த் சகாய் - உணவு பதப்படுத்துதல்

28. எம்.எஸ்.கில் - இளைஞர் நலன், விளையாட்டு

29. ஜி.கே.வாசன் - கப்பல் போக்குவரத்து

30. பவன்குமார் பன்சால் - நாடாளுமன்ற விவகாரம்

31. முகுல் வாஸ்னிக் - சமூக நீதி

32. காந்திலால் புரியா - பழங்குடியினர் நலன்

33. மு.க. அழகிரி - ரசாயனம், உரம்

இணையமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)

34. பிரஃபுல் படேல் - விமானப் போக்குவரத்து

35. பிரித்விராஜ் சவாண் - அறிவியல், தொழில் நுட்பம்

36. ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் - நிலக்கரி, புள்ளியியல்

37. சல்மான குர்ஷித் - கம்பெனி விவகாரம், சிறுபான்மையினர் நலன்

38. தின்ஷா படேல் - குறு, சிறு தொழில்கள்

39. ஜெய்ராம் ரமேஷ் - சுற்றுச்சூழல், வனம்

40. கிருஷ்ணா தீரத் - பெண்கள், குழந்தைகள் மேம்பாடு

இணையமைச்சர்கள்

41.இ. அகமது - ரயில்வே

42.வி. நாராயணசாமி - திட்டம், நாடாளுமன்ற விவகாரம்

43.ஸ்ரீகாந்த் ஜேனா - ரசாயனம், உரம்

44. முல்லபள்ளி ராமச்சந்திரன் - உள்துறை

45. புரந்தேஸ்வரி - மனிதவள மேம்பாடு

46.பனபாக லட்சுமி - ஜவுளி

47.அஜய் மாரெகன் - உள்துறை

48.கே.எச்.முனியப்பா - ரயில்வே

49.நமோ நாராயண் மீனா - நிதி

50.ஜோதிராதித்ய சிந்தியா - தொழில், வர்த்தகம்

51.ஜிதின் பிரசாத் - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு

52.சாய் பிரதாப் - உருக்கு

53.குருதாஸ் காமத் - தொலைத்தொடர்புத் துறை, ஐ.டி.

54.பல்லம் ராஜு - ராணுவம்

55.மகாதேவ் கண்டேலா - நெடுஞ்சாலை, தரைவழி போக்குவரத்து

56.ஹரீஷ் ராவத் - தொழிலாளன் நலன், வேலை வாய்ப்பு

57.கே.வி.தாமஸ் - விவசாயம், நுகர்வோர் நலன், உணவு, பொது
விநியோகம்

58.சுவுகதா ராய் - நகர்ப்புற மேம்பாடு

59.சிசிர் அதிகாரி - கிராமப்புற மேம்பாடு

60.தினேஷ் திரிவேதி - சுகாதாரம், குடும்ப நலம்

61.சுல்தான் அகமது - சுற்றுலா

62.முகுல் ராய் - கப்பல்

63.மோகன் ஜாதுவா - தகவல் ஒளிபரப்பு

64.எஸ்.எஸ். பழனிமாணிக்கம் - நிதி

65.டி.நெப்போலியன் - சமூக நீதி

66.எஸ். ஜெகத்ரட்சகன் - தகவல் ஒளிபரப்பு

67.எஸ். காந்தி செல்வன் - சுகாதாரம், குடும்ப நலம்

68.பிரீனித் கவுர் - வெளியுறவு

69.சச்சின் பைலட் - தொலைத்தொடர்பு, ஐ.டி.

70.சசி தரூர் - வெளியுறவு

71.பரத்சிங் சோலங்கி - மின்சாரம்

72.துஷார்பாய் செளத்ரி - பழங்குடியினர் நலம்

73.அருண் யாதவ் - இளைஞர் நலன், விளையாட்டு

74.பிரதீக் பிரகாஷ் பாபு பாட்டீல் - கனரகம் பொதுத்துறை

75.ஆர்.பி.என். சிங் - தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலை

76.வின்சென்ட் பாலா - நீர்வளம்

77.பிரதீப் ஜெயின் - கிராம மேம்பாடு

78.அகதா சங்மா - கிராம மேம்பாடு



கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர்கள்..?

இதில் 206 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 28 கேபினட் அமைச்சர்கள், 6 தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள், 26 இணை அமைச்சர்கள் என்று மொத்தம் 60 அமைச்சர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

18 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் தி.மு.க.வுக்கு 3 கேபினட் மற்றும் 4 இணை அமைச்சர்கள் என்று 7 அமைச்சர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

9 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 1 கேபினட் அமைச்சரும், 1 தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சரும், 1 இணை அமைச்சரும் உள்ளனர்.

19 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு 1 கேபினட் அமைச்சரும், 6 இணை அமைச்சர்களும் கிடைத்துள்ளனர்.

3 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 1 கேபினட் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

2 இடங்களைக் கைப்பற்றியிருக்கும் கேரள முஸ்லீம் லீக் கட்சிக்கு 1 இணை அமைச்சர் பதவி கிட்டியிருக்கிறது.




மாநில வாரியாக அமைச்சர்களின் பிரதிநிதித்துவம்

மாநில வாரியாக பட்டியலிட்டுப் பார்த்தால்

ஆந்திரா - 1 கேபினட் அமைச்சர், 5 இணை அமைச்சர்கள்

அசாம் - 2 கேபினட் அமைச்சர்கள்

பீகார் - 1 கேபினட் அமைச்சர்

குஜராத் - 3 இணை அமைச்சர்கள்

அரியானா - 1 கேபினட் அமைச்சர்

இமாச்சலப்பிரதேசம் - 2 கேபினட் அமைச்சர்கள்

காஷ்மீர் - 2 கேபினட் அமைச்சர்கள்

ஜார்கண்ட் - 1 கேபினட் அமைச்சர்

கர்நாடகா - 3 கேபினட் அமைச்சர்கள், 1 இணை அமைச்சர்

கேரளா - 2 கேபினட் அமைச்சர்கள், 4 இணை அமைச்சர்கள்

மத்தியப்பிரதேசம் - 2 கேபினட் அமைச்சர்கள், 4 இணை அமைச்சர்கள்

மகாராஷ்டிரா - 5 கேபினட் அமைச்சர்கள், 4 இணை அமைச்சர்கள்

மேகாலயா - 1 கேபினட் அமைச்சர், 2 இணை அமைச்சர்கள்

ஒரிசா - 1 இணை அமைச்சர்

பஞ்சாப் - 2 கேபினட் அமைச்சர்கள், 1 இணை அமைச்சர்

ராஜஸ்தான் - 1 கேபினட் அமைச்சர், 2 இணை அமைச்சர்கள்

தமிழ்நாடு - 5 கேபினட் அமைச்சர்கள், 4 இணை அமைச்சர்கள்

உத்தரண்ட் - 1 இணை அமைச்சர்

உத்தரப்பிரதேசம் - 1 இணை அமைச்சர்

மேற்குவங்கம் - 2 கேபினட் அமைச்சர்கள், 6 இணை அமைச்சர்கள்

டில்லி - 1 கேபினட் அமைச்சர், 2 இணை அமைச்சர்கள்

புதுவை - 1 இணை அமைச்சர்

சண்டிகர் - 1 இணை அமைச்சர்

அருணாச்சலப் பிரதேசம், சட்டீஸ்கர், கோவா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு அமைச்சர் பதவிகள் கிட்டவில்லை. அதேபோல் யூனியன் பிரதேசங்களான அந்தமான், தத்ராநகர் ஹவேலி, டாமன் டையூ, லட்சத்தீவு ஆகியவைகளுக்கும் அமைச்சர் பதவி ஹி..ஹி..

இந்த அமைச்சரவைப் பட்டியலில் 5 பேர் முஸ்லீம்கள், 3 பேர் கிறிஸ்தவர்கள். மிச்சம் மீதி இருப்பவர்களில் 10 பேர் ஆதி திராவிடர்கள்.




பதவி உயர்வு

கடந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 10 இணை, துணை அமைச்சர்களுக்கு இந்த முறை கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் இணை அமைச்சர்களாக இருந்த ஜி.கே.வாசன், பவன்குமார் பன்சல், சுபோத்காந்த் சகாய், குமாரி செல்ஜா, எம்.எஸ்.கில், கான்டிலால் புரியா ஆகியோர் இந்த முறை கேபினட் அந்தஸ்தை பெற்றுள்ளனர்.

கடந்த அமைச்சரவையில் இணை அமைச்சர்களாக இருந்த பிரகாஷ்ஜெய்ஸ்வால், ஜெய்ராம் ரமேஷ், பிரித்விராஜ் சவான், தின்ஷா படேல் ஆகியோருக்கு இந்த முறை தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கேபினட் அமைச்சர்களான முன்னாள் முதல்வர்கள்..!

இந்த அமைச்சரவையில் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த முன்னாள் முதல்வர்களும் இடம் பெற்றிருக்கின்றனர்.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர்களான எஸ்.எம்.கிருஷ்ணா, வீரப்பமொய்லி, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, குலாம்நபிஆசாத், கேரள முன்னாள் முதல்வர் ஏ.கே.அந்தோணி, மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர்களான சரத்பவார், சுசில்குமார் ஷிண்டே, விலாஸ்ராவ்தேஷ்முக் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.


வயசான பார்ட்டிகதான் அதிகம்..!

ஏதோ இளைய சமுதாயம்தான் இந்தியாவை தள்ளிக் கொண்டு போகிறது என்று பலரும் சரக்கடிக்காமலேயே சரக்கடித்த போதையில் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மை நிலவரம் என்னவெனில் இந்த அமைச்சரவையில் முக்கியத் துறைகளை கையில் வைத்திருக்கும் 27 அமைச்சர்களின் வயது 65-க்கும் மேல். சாகுறவரைக்கும் பதவியை விட மாட்டோம் என்று வெறி பிடித்து அலைவதில் இந்தியர்களை மிஞ்ச ஆளில்லை என்று நினைக்கிறேன்.

புதிய வெளியுறவுத்துறை அமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாதான் இந்த அமைச்சரவையிலேயே மிக அதிக வயதானவர். ஜஸ்ட் 77தான். மிகக் குறைந்த வயதுடையவர் மேகலாயவில் இருந்து இரண்டாவது முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அசுதாசங்மா. இவரது வயது 28.

GSM,CDMA

GSM
Global System for Mobile communications

CDMA
Code division multiple access (CDMA)

கோள்கள்

கதிரவன் குடும்பத்திலுள்ள கோள்கள்


புதன்

வெள்ளி

பூமி

செவ்வாய்

வியாழன்

சனி

யுரேனஸ்

நெப்டியூன்

குறுங்கோள்கள்

சீரிஸ்

புளூட்டோ

ஏரிஸ்

துணைக் கோள்கள்

நிலா

பன்றிக் காய்ச்சல்

18-11-2009 நிலவரப்படி இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 533 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை மகாராஷ்டிராவில்தான் அதிகபட்சமாக 214 பேர் இறந்துள்ளனர். கர்நாடகத்தில் 119 பேரும், ஆந்திராவில் 49 பேரும், குஜராத்தில் 45 பேரும், கேரளாவில் 25 பேரும், ராஜஸ்தானில் 23 பேரும், டெல்லியில் 18 பேரும் தமிழகத்தில் 10 பேரும், புதுச்சேரியில் 6 பேரும், ஹரியாணா, கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் தலா 5 பேரும், உ.பியில் 3 பேரும், பஞ்சாபில் 2 பேரும், சட்டீஸ்கர், இமாச்சல் பிரதேசம், ஒரிசா, மிஸோரமில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

புவி

புவி பற்றி சில தகவல்கள்


வயது : 4,55,00,00,000 (ஆண்டுகள்) ஏறக்குறைய ( 4550 மில்லியன் ஆண்டுகள் )

நிறை : ஏறக்குறைய 6000 மில்லியன் மில்லியன் டன்கள்

விட்டம் : துருவத்திற்கு துருவம் 12714 கி . மீ.

நடுவரைக் கோட்டில் 12756 கி . மீ.

சூரியனிடமிருந்து தொலைவு : 1496,00,000 கி . மீ. (1496 லட்சம் கி . மீ. )

சுற்றளவு : துருவங்களைச்சுற்றி 40000 கி . மீ.

நடுவரைக்கோட்டில் 40076 கி . மீ.

நீரின் பரப்பு : மொத்தபரப்பில் 71 விழுக்காடு

( ஏறத்தாழ 362 மில்லியன் ச . கி. மீ. )

நிலப் பரப்பு :மொத்தபரப்பில் 29 விழுக்காடு

( ஏறத்தாழ 148 மில்லியன் ச . கி. மீ. )

பெருங்கடலின் சராசரி ஆழம் : கடல் மட்டத்தில் இருந்து 3795 மீ கீழ்