Thursday, November 19, 2009

எதிர்ச்சொல்லைக் கண்டறிதல்

தமிழில் ஒரு சொல்லுக்குரிய எதிர்ப்பதம் எழுதுவதைத்தான் இப்பகுதியில் கேள்வியாக கேட்கப்படுகின்றது. சில முக்கியமான தமிழ்ச் சொற்களுக்குரிய எதிர்ப்பதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை நன்கு படித்துக் கொள்ளவும். இப் பகுதியில் இருந்து ஒன்று அல்லது இரண்டு வினாக்கள் உறுதியாக கேட்கப்படுகின்றது. இப்பகுதி எளிதில் மதிப்பெண் பெற உதவக்கூடிய பகுதி.



ஆடவர் – பெண்டிர்



அழித்தல் – ஆக்கல்



அண்மை – தொலைவு, சேய்மை



அரிய – எளிய



அடிமை – சுதந்திரம்



அடி – நுனி



அன்பு – பகை



அற்றை – இற்û



ஆகும் – ஆகாது



அன்பான – அன்பற்ற



அடைத்தல் – திறத்தல்



அகம் – புறம்



அன்றே – இன்ú



அறப்போர் – மறப்போர்



அமைதி – ஆரவாரம்



அளித்தார் – பறித்தார்



அமர்ந்து – எழுந்து



அல்லும் – பகலும்



அற்றகுளம் – அறாதகுளம்



இன்பம் – துன்பம்



இனிய – இன்னாத



இழிவு – உயர்வு



இணை – பிரி



இடம் – வலம்



இளமை – முதுமை



இயற்கை – செயற்கை



இறுதி – தொடக்கம்



இன்சொல் – புன் சொல், கொடுஞ்செயல்



இம்மை – மறுமை



இளமை – முதுமை



இன்னா – இனிய



இல்லை – உண்டு



இழப்பு – ஆதாயம்



இரவு – பகல்



உயர்வு – தாழ்வு



உறங்கு – விழி



உண்மை – பொய்மை



உரிமை – அடிமை



உடன்பாடு – மாறுபாடு



உற்றுழிவு – உறாவுழி



உள்ளரங்கம் – வெளியரங்கம்



உத்தமர் – அதமர்



உள்பொருள் – வெளிப்பொருள்



ஒற்றுமை – வேற்றுமை



ஏற்றம் – இறக்கம்



நிறை – குû



மலர்தல் – கூம்பல், குவிதல்



மிகுதி – குறைவு



முதுகலை – இளங்கலை



தண்மை – வெம்மை



வெற்றமை – இழந்தமை



தட்பம் – எளிமை



புகழ்ச்சி – இகழ்ச்சி



பிரிந்து – சேர்ந்து



பலர் – சிலர்



பாவம் – புண்ணியம்



பழி – புகழ்



பழமை – புதுமை



பல – சில



புதிய – பழைய



பற்பல – சிற்சில



பள்ளம் – மேடு



பழம் – காய்



புதுமை – பழமை



பழம்பாடல் – புதுப்பாடல்



பின்னர் – முன்னர்



பிரிக்கலாம் – சேர்க்கலாம்



பிழை – திருத்தம்



பெருந்தொகை – சிறுதொகை

செலவு- வரவு




சோம்பல்- சுறுசுறுப்பு



விழைந்தார்- வெறுத்தார்



சிற்றூர்- பேரூர்



பெருமை- சிறுமை



விருப்பு- வெறுப்பு



வென்று- தோற்று



பெருகி- சுருங்கி



சிற்றாறு- பேராறு



நீதி- அநீதி



எளிது- அரிது



பெரியவர்- சிறியவர்



குழு- தனி



நண்பன்- பகைவன்



கூடி- பிரிந்து



வெற்றி- தோல்வி



வெளியே- உள்ளே



மேலே- கீழே



கேடு- நலம்



முன்- பின்



வேறுபாடு- ஒருமைப்பாடு



தூய்மை- மாசு



சிற்றரசர் – பேரரசர்



வளர்ச்சி- தளர்ச்சி



தொன்மை- அண்மை



குடியரசு – முடியரசு



மகிழ்ச்சி- வருத்தம்



மகிழ்ச்சி- துயரம்



பிறந்தார்- மறைந்தார்



மூத்த- இளைய



தொடக்கம்- முடிவு



ஒழுங்காக- ஒழுங்கின்றி



தந்தை- தாய்



மகன்- மகள்



நம்பி- நங்கை



குமரன்- குமரி



தூயன்- வீராங்கனை



கீழைநாடு- மேலை நாடு



எழுச்சி- வீழ்ச்சி



எளிய- அரிய



மற- நினை



தோன்று- மறைய



செய்வோம்- செய்யோம்



முதன்மை- இறுதி



ஓங்கிய- தாழ்ந்த



எட்டிய- எட்டா



நட்பு- பகை



நன்மை- தீமை



செம்மை- கருமை



நண்பர்- பகைவர்



காலை- மாலை



செல்வர்- ஏழை



ஏறி- இறக்கி



வேண்டும்- வேண்டாம்



வாழ்த்தல்- தூற்றல்



சிறியவர்- பெரியவர்



தலைவர்- தொண்டர்



ஒன்று- பல



நீண்ட- குறுகிய



தீது- நன்று



பொய்- மெய்



தவறு- சரி



முடியும்- முடியாத



திண்மம்- நீர்மம்



குழி- மேடு



வளைத்தல்- நிமிர்த்தல்



வடக்கு- தெற்கு



வடநாடு- தென்னாடு



வரவு- செலவு



வாடுதல்- தழைத்தல்



வாழ்வு- தாழ்வு



பல்வேறு பசடநஇ பொதுத் தமிழ் வினாக்களில் எதிர்ச்சொல்லை கண்டறிக என்ற தலைப்பின் கீழ் கேட்கப்பட்ட வினாக்கள் பின் வருமாறு.



1. களிப்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல் தேர்க.



அ. கோபம், ஆ. எரிச்சல்,



இ. மகிழ்ச்சி, ஈ. துயரம்



2. பகைவன் என்ற சொல்லின் எதிர்ச்சொல் தேர்க.



அ. நல்லவன், ஆ. நண்பன்,



இ. எதிரி, ஈ. வல்லவன்



3. எதிர்ச்சொல் தருக -இசை



அ. வசை, ஆ. ஞானம்,



இ. புகழ், ஈ. பெருமை



4. எதிர்ச்சொல் தருக -தண்மை



அ. தட்பம், ஆ.மழை,



இ. வெம்மை, ஈ.குளிர்



5. எதிர்ச்சொல் தருக -நன்மை



அ. பகை, ஆ. வெறுப்பு,



இ. தீமை, ஈ. இன்மை



6. எதிர்ச்சொல் தருக -நிû



அ. எடை, ஆ. வெறுப்பு,



இ. தடை, ஈ. குû



7. இனிய என்ற சொல்லின் எதிர்ச்சொல் தேர்க.



அ. நல்ல, ஆ. இடரான,



இ. இன்னாத, ஈ. இன்பமான



8. கனி என்ற சொல்லின் எதிர்ச்சொல் தருக.



அ. நனி, ஆ. பனி, இ. காய்,



ஈ. பழம்



9. நன்மை இச்சொல்லின் எதிர்ச்சொல் தருக.



அ. தீமை, ஆ. உண்மை,



இ. வன்மை, ஈ. தூய்மை



10. வெப்பம் என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல் தருக.



அ. தண்மை, ஆ. அழை,



இ. மிதம், ஈ. பனி

No comments:

Post a Comment