Thursday, November 19, 2009

வேர்ச்சொல்லை தேர்வு செய்தல்

ஒரு சொல்லை கொடுத்துவிட்டு அதற்குரிய முதனிலை அல்லது பகுதியை அல்லது வேர்ச்சொல்லை கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளில் ஒன்றினைத் தேர்வு செய்தலே இப்பகுதியாகும். மிக எளிமையான பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இப்பகுதியில் உறுதியாக ஒன்று அல்லது இரண்டு வினாக்களும் இதை தொடர்புபடுத்தி ஒன்று அல்லது இரண்டு வினாக்கள் கேட்கப்படும்.




வேர்ச்சொல்



வேர்ச்சொல் என்றால் தர்ர்ற் என பொருள்படும்.



வேர்ச்சொல்லை பிரிக்க முடியாது



எந்த ஒரு சொல்லையும் ஏவல் அல்லது கட்டளையாக மாற்றினால் வருவது வேர்ச்சொல்.



சொற்கள்



வேர்ச் சொல்



கண்டான்



நாடினான்



போகின்றான்



வென்றான்



தேடினான்



பாடுவாள்



ஓடுகிறான்



செல்வான்



அறிந்தான்



நடந்தான்



நடித்தான்



எழுதினான்



பார்த்தான்



பருகினான்



சென்றான்



கூவினான்



பணிந்தான்



உண்டான்



-காண்



- நாடு



- போ



- வெல்



- தேடு



- பாடு



- ஓடு



- செல்



- அறி



- நட



- நடி



- எழுது



- பார்



- பருகு



- செல்



- கூவு



- பணி



- உண்



காண், உடை, பூசு, பிள, படு, எடு, ஓது, உழு, எழு, வா, போ போன்றவை வேர்ச் சொற்களாகும்.



வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு பசடநஇ வினாத்தாளில் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள்



1. வேர்ச்சொல்லைத் தேர்க -வெந்த



அ. வே, ஆ. வெகு, இ. வெந்து, ஈ. வேதல்



2. வேர்ச்சொல்லைத் தேர்க -செத்தது



அ. செத்து, ஆ. செத்த, இ. சே, ஈ. சா



3. வேர்ச்சொல்லைத் தேர்க செய்க -போகின்றான்



அ. போனான், ஆ. போனாள், இ. போகின்றன, ஈ. போ



4. வினைச்சொல்லிற்குரிய சரியான வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -உண்டான்



அ. உண்ட, ஆ. உண்ணும், இ. உண், ஈ. உண்டு



5. வினைச் சொல்லிற்குரிய சரியான வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -வந்தான்



அ. வந்த, ஆ. வா, இ. வந்து, ஈ. வருக.



6. வேர்ச் சொல்லைத் தேர்க -கற்றான்



அ. கல், ஆ. காண், இ. கற்றான், ஈ. கற்றது



7. வினைச் சொல்லிற்குரிய சரியான வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -ஓடினான்



அ. ஓடுதல், ஆ. ஓடின, இ. ஓடு, ஈ. ஓடுக



8. வேர்ச்சொல் அல்லது முதனிலையைக் குறிப்பிடுக -தருகின்றான்



அ. தரும், ஆ. தரு, இ. தா, ஈ. தருக.



9. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க (பகுதியை) -செல்வான்



அ. சென்ற, ஆ. செல், இ. சென்று, ஈ. செல்கி



10. வேர்ச்சொல்லைத் தேர்க -நொந்தான்



அ. நொ, ஆ. நோ, இ. நொவு, ஈ. நொண்டு



11. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -படித்தான்



அ. படித்த, ஆ. படித்து, இ. படி, ஈ. படித்தல்



12. வேர்ச்சொல்லை தேர்க -கண்டு



அ. கண், ஆ. காண்கு, இ. காண், ஈ. காண்க



13. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -வந்தான்



அ. வ, ஆ. வந்து, இ. வந், ஈ. வா



14. வேர்ச்சொல் அறிந்து எழுதுக -கண்டு



அ. காண், ஆ. கண், இ. காண்க, ஈ. காணல்



15. வேர்ச்சொல்லை கண்டுணர்ந்து குறிக்க -பாடிய



அ. பாடு, ஆ. பா, இ. பண், ஈ. பாடி



16. சென்றன -என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்க



அ. சென், ஆ. சென்ற, இ. சென்று, ஈ. செல்



17. கற்றவர் -என்பதன் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க



அ. கற்க, ஆ. கள், இ. கற்று, ஈ. கல்



18. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -நின்றார்



அ. நில், ஆ. நின், இ. நின்ற, ஈ.நின்று



19. நடக்கின்றான் என்றச் சொல்லின் சரியான வேர்ச்சொல்லைத் தேர்க



அ. நடந்தன, ஆ. நட, இ. நடந்தான், ஈ. நடந்து



20. சென்றான் என்றச் சொல்லின் வேர்ச்சொல் எது?



அ. சென்று, ஆ. செல்லு, இ. செல், ஈ. செல்லுதல்



21. படித்தான் என்றச் சொல்லின் வேர்ச்சொல் எது?



அ. படிர், ஆ. படித்து, இ. படிக்கு, ஈ.படி



22. தந்தான் என்றச் சொல்லின் வேர்ச்சொல் எது?



அ. தன், ஆ. தா, இ. தருக, ஈ. தந்து



23. கீழ்க்காண் சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டு வட்டமிடுக -வருக



அ. வா, ஆ. வாழ்தல், இ. வாழ்வு, ஈ. வாழ்க்கை



24. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -சொல்… கெட்டான்



அ. கேடு, ஆ. கெடு, இ. கெட்ட, ஈ. கெட்டு



25. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க சொல் -நின்றான்



அ. நில், ஆ. நின், இ. நின்று, ஈ. நின்



26. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க -சொல் -கண்டான்



அ. கண், ஆ. கண்டு, ஈ. கண்ட, ஈ. காண்



விடை:



1. C, 2. C, 3. D, 4. C, 5. B, 6. A, 7. C, 8. D, 9. B, 10. A, 11. C, 12. C, 13. D, 14. A, 15. A, 16. D, 17. D, 18. A, 19. B, 20. C, 21. D, 22. B, 23. A, 24. B, 25. A, 26. D.

4 comments:

  1. வேர்ச்சொல் அல்லது முதனிலையைக் குறிப்பிடுக -தருகின்றான்



    இ. தா

    ReplyDelete
  2. இயல்பானது வேர் சொல் என்ன

    ReplyDelete