Thursday, November 19, 2009

பிறமொழிச் சொற்களை நீக்குதல்

தமிழ் அல்லாத பிறமொழியில் உள்ள சொற்கள் கலந்த மூன்று தொடர் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் எது நல்ல தமிழில் அமைந்த தொடர் என கண்டுபிடித்தலே இப்பகுதியாகும். பிறமொழியில் உள்ள சில சொற்களும் அவற்றிற்கு உரிய தமிழ்ச் சொற்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



ஆங்கிலச் சொற்கள்: தமிழ்ச் சொற்கள்


ஹேர்கட்டிங் சலூன் – முடிதிருத்தகம்



ஹோட்டல் – உணவகம்



மெடிக்கல் ஷாப் – மருந்தகம்



கிளாத் ஸ்டோர்ஸ் – துணியங்காடி



பஸ் ஸ்டாண்டு – பேருந்து நிலையம்



லேட் – காலம் கடந்து



மீட்டிங் – கூட்டம்



இம்ப்ரூ – பெருக்கு



பஸ் ஸ்டாப் – பேருந்து நிறுத்தம்



கம்பெனி – குழுமம்



இண்டஸ்ட்ரி – தொழிலகம்



டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் – தட்டெழுத்துப் பயிலகம்



ஸ்டேஷனரி ஷாப் – எழுதுபொருள் அங்காடி



காபி பார் – குளம்பியகம்



டீ ஸ்டால் – தேநீர் அங்காடி



பிரிண்டிங் பிரஸ் – அச்சகம்



ஸ்கூல் – பள்ளிக்கூடம்



ஆஸ்பிடல் – மருத்துவமனை



டெலிபோன் – தொலைபேசி



கம்ப்யூட்டர் – கணினி



டிஸ்க் – குறுந்தகடு



டாக்டர் – மருத்துவர்



டீப் போர் வெல் – ஆழ்துளைக் கிணறு



டைம் – நேரம், மணி



நாலெட்ஜ் – அறிவு



பஸ் – பேருந்து



ஹாஸ்டல் – விடுதி



போஸ்ட் ஆபீஸ் – அஞ்சல் நிலையம்



போலீஸ் ஸ்டேஷன் – காவல் நிலையம்



சிட்டி – நகரம்



வோல்டு – உலகம்



கண்ட்ரி – நாடு



ரிவர் – நதி



பர்ஸ்ட் கிளாஸ் – முதல் வகுப்பு



சூப்பர் – சிறப்பு



ஸ்பெஷல் – தனி



பேரண்ட்ஸ் – பெற்றோர்



பிளே கிரவுண்ட் – விளையாட்டுத்திடல்



அட்மிஷன் – சேர்க்கை



ஏஜென்ஸி – முகவாண்மை



ஆக்ஸிடெண்ட் – நேர்ச்சி



ஜெராக்ஸ் – ஒளிப்படி



ஆடியோகேசட் – ஒலிப்பேழை



விடியோகேசட் – ஒளிப்பேழை



டைப்பிஸ்ட் – தட்டச்சர்



பிளாட்பாம் – நடைபாதை



பிளாஸ்டிக் – நெகிழி



நோட்புக் – குறிப்பேடு



லாரி – சரக்குந்து



லாண்டரி – வெளுப்பகம்



எவர்சில்வர் – நிலைவெள்ளி



அட்டெண்டன்ஸ் – வருகைப்பதிவு



ஆட்டோமொபைல் – தானியங்கி



பைண்டிங் – கட்டமைப்பு



கேபிள் – கம்பிவடம்



செக் – காசோலை



லைன் – வரிசை



சக்ஸஸ் – வெற்றி



ரெயின் வாட்டர் ஹார்வெஸ்ட் – மழைநீர் சேகரிப்பு



பாஸ் – தேர்ச்சி



டிரை – முயற்சி



பேமிலி – குடும்பம்



ஸ்மால் – சிறிய

18. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.




மெட்ராஸ் சிட்டிக்கு செல்லவேண்டும்.



அ. மதராஸ் சிட்டிக்கு செல்ல வேண்டும்.



ஆ. சென்னைப் பட்டணத்திற்கு



இ. சென்னை சிட்டிக்கு



ஈ. சென்னை நகரத்திற்கு



19. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.



ஆஸ்பத்திரிக்குச் சென்று டெஸ்ட் செய்துவா



அ. ஆஸ்பத்திரிக்குச் சென்று உடல்நிலையை டெஸ்ட் செய்துவா



ஆ. ஆஸ்பத்திரிக்குச் சென்று உடல்நிலையைச் சோதனை செய்து வா



இ. மருத்துவமனைக்குச் சென்று உடல்நிலையை சோதனை செய்து வா



ஈ. மருந்து அகத்திற்குச் சென்று உடல்நிலையை சோதனை செய்து வா



20. தொடரில் உள்ள ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லைக் குறிப்பிடுக.



கந்தன் தொழிலில் டெவலப் அடைந்தான்



அ. முன்னேற்றம், ஆ. பின்நிலை,



இ. உயர்ந்த நிலை, ஈ. வளரும் நிலை



21. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.



ரெகுலர் அட்டெண்டன்ஸ் தேவை



அ. விருப்பத்துடன் வருகை தேவை



ஆ. ஒழுங்கான வருகை தேவை



இ. கவனத்துடன் வருகை தேவை



ஈ. குறைவு இல்லா வருகை தேவை



22. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைக் குறி



மெடிக்கல் ஷாப் போனேன்



அ. மருந்து ஷாப் போனேன்



ஆ. மருந்துக் கடைக்குப் போனேன்.



இ. ஷாப் கடைக்குப் போனேன்



ஈ. மெடிக்கல் வாங்கப் போனேன்



23. ஐடன்டிபிகேஷன் சர்டிபிகேட் -இச்சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல் தருக.



அ. ஆளறி மனு, ஆ. ஆளறி சான்றிதழ்,



இ. அடையாள அட்டை, ஈ. அடையாளச் சீட்டு



24. கலெக்டர் என்ற சொல்லிற்கு சரியான தமிழ்ச் சொல் தருக.



அ. ஆட்சியர், ஆ. வட்டாட்சியர்,



இ. சேகரிப்பவர், ஈ. கோட்டாட்சியர்

25. ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லில் வட்டமிடுக



நூற்றுக்குச் சேஞ்ச் இருக்குமா?



அ. சில்லறை, ஆ. சில்லரை, இ. மாற்றம், ஈ. துண்டு



26. ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லில் வட்டமிடுக.



கவுண்டிங் என்றைக்கு?



அ. சரிபார்ப்பு, ஆ. பெருவேலை,



இ. எண்ணிக்கை, ஈ. பதிவு


விடைகள்:

18. D, 19. C, 20. A, 21. B, 22. B, 23. B, 24. A, 25. C, 26. C


21. உவமையால் விளக்கப் பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்க.




அ. துரோகம், ஆ. அழிவு, இ. ஆக்கம்,



ஈ. கடமையின்மை



22. பிறமொழிச் சொல் கலவாத வழு இல்லாத தொடரைக் கண்டு வட்டமிடுக.



அ. வருசக் கடைசி, ஆ. வருடக் கடைசி



இ. வருஷக் கடைசி, ஈ. ஆண்டுக் கடைசி



23. பிறமொழிச் சொல் இல்லாத தொடரைக் கண்டு வட்டமிடுக.



அ. கும்பாபிஷேகம், ஆ. குடஅபிசேகம்,



இ. குடம் அபிஷேகம், ஈ. குடமுழுக்கு



24. பிறமொழிச் சொற்களை நீக்குக.



அ. தினசரி உடல் பயிற்சி செய்



ஆ. நாள்தோறும் உடற்பயிற்சி செய்



இ. தினமும் உடற்பயிற்சி செய்



ஈ. தினமும் உடல் பயிற்சி செய்



25. பிறமொழிச் சொற்களை நீக்குக.



அ. விஷயம், ஆ. ஹாஸ்டல், இ. ஆஸ்தி, ஈ. செய்தி



26. பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் எது?



அ. ஆஸ்தி, விஷயம், ஹாஸ்டல்



ஆ. சொத்து, விஷயம், ஹாஸ்டல்



இ. சொத்து, செய்தி, விடுதி



ஈ. சொத்து, செய்தி, ஹாஸ்டல்



27. பிறமொழிச் சொல்லை நீக்குக.



பிள்ளையார் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.



அ. பிள்ளையார் கோயிலுக்கு கும்பாபிஷேகம்



நடந்தது



ஆ. பிள்ளையார் கோயிலுக்கு ஆராதனை நடந்தது



இ. பிள்ளையார் கோயிலுக்கு திருவிழா நடந்தது



ஈ. பிள்ளையார் கோயிலுக்கு நீராட்டு விழா நடந்தது.



விடைகள்: 21. அ, 22. ஈ, 23. ஈ, 24. ஆ, 25. ஈ, 26. இ. 27. ஈ.

No comments:

Post a Comment