பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் ஆகும். எடுத்துக்காட்டு -மரம், செடி, பூ, சூரியன். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்.
1. பொருட்பெயர்
பொருளை குறிக்கும் பெயர் பொருட்பெயர். எடுத்துக்காட்டு -மரம், செடி, மின்விசிறி, நாற்காலி.
2. இடப்பெயர்
இடத்தைக் குறிக்கும் பெயர் இடப்பெயர். எ.கா. -உலகம், ஆசியா, இந்தியா, தமிழ்நாடு, சென்னை.
3. சினைப்பெயர்
சினை என்றால் உறுப்பு என பொருள்படும். உறுப்பை குறிக்கும் பெயர் சினைப்பெயர்.
மரம் -பொருட்பெயர். இரை, தண்டு, வேர் போன்றவை அதன் உறுப்புகள். எனவே இவை சினைப்பெயர்கள் ஆகும்.
உடல் -பொருட்பெயர்
கண், காது, மூக்கு, கை என்பவை சினைப்பெயர்கள்.
4. காலத்தை குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.
திங்கள், செவ்வாய், நாள், வாரம், ஆண்டு, காலை, மாலை ஆகியவை காலப்பெயர்கள்.
5. பண்புப் பெயர்
ஒரு பொருளின் பண்பு அல்லது தன்மை அல்லது அதன் குணத்தை குறிப்பது பண்புப்பெயர்.
எடுத்துக்காட்டு -பச்சை இலை, சிவப்பு மை பண்புப்பெயர். உ, கு, றி, று, அம், சி, பு, ஜ, மை, பம், நர் என்ற விகுதியுடன் முடியும் (மை அதிகமாக இடம்பெறும்.)
6. தொழிற்பெயர்
தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர். எ.கா. -படித்தல், ஓடுதல், நடத்தல், தல், அல், அம், ஐ, கை, வை, பு, வு, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆணை, மை, து என்ற விகுதியுடன் முடியும்.
ஓங்குதல், சாக்காடு, வெறுக்கை, தருக்கல், காண்பு, ஒருவுதல், மனம் கவல்வு, செய்கை, இகழ்தல், உணர்வு, கொலல், நந்தம், நீட்டம், ஆண்மை, பெருக்கல், ஒழுக்கு, உண்டி, செய்தல், கொடுமை, உரைத்தல், காண்பு, நல்குரவு, கடத்தல்.
பெயர்ச்சொல்லின் வகையறிதல் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு பசடநஇ வினாத்தாளில் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள்
1. மலர் என்பது
அ. சினைப் பெயர், ஆ. பொருள் பெயர், இ. இடப் பெயர், ஈ. பண்புப் பெயர்
2. பெயர்ச்சொல்லின் வகை அறிக -செம்மை
அ. இடப் பெயர், ஆ. பண்புப் பெயர்,
இ. சினைப் பெயர், ஈ. தொழிற் பெயர்
3. பெயர்ச் சொல்லின் வகை அறிக -நல்லன்
அ. இடப் பெயர், ஆ. சினைப் பெயர்,
இ. குணப் பெயர், ஈ. தொழிற் பெயர்
4. பெயர்ச்சொல்லின் வகையறிக -மதுரை
அ. சினைப் பெயர், ஆ. பொருட் பெயர்,
இ. குணப் பெயர், ஈ. இடப் பெயர்
5. செய்தல் என்பது
அ. பொருட் பெயர், ஆ. சினைப் பெயர்,
இ. தொழிற் பெயர், ஈ. பண்புப் பெயர்
6. பின்வரும் பெயர்ச் சொல்லின் எவ்வகை எனக் குறிப்பிடுக -வற்றல்
அ. பொருட் பெயர், ஆ. இடப்பெயர்,
இ. தொழிற்பெயர், ஈ. சினைப் பெயர்
7. பெயர்ச்சொல்லின் வகையறிக -ஊதியம்
அ. பொருட்பெயர், ஆ. சினைப்பெயர்,
இ. குணப் பெயர், ஈ. காலப்பெயர்
8. உலகம் என்ற பெயர்ச்சொல்லின் வகை தேர்க.
அ. காலப்பெயர், ஆ. பொருட்பெயர்,
இ. இடப்பெயர், ஈ. சினைப் பெயர்
9. பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்க -பணிவு
அ. காலப்பெயர், ஆ. இடப்பெயர்,
இ. சினைப்பெயர், ஈ. தொழிற்பெயர்
10. பெயர்ச்சொல்லின் வகை தெளிக -தோள்
அ. தொழிற்பெயர், ஆ. சினைப்பெயர்,
இ. காலப்பெயர், ஈ. பொருட்பெயர்
விடைகள்:
1. A, 2. B, 3. C, 4. D, 5. C, 6. C, 7. A, 8. C, 9. D., 10. B
Thursday, November 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
very useful one. Thank You... Keep it up
ReplyDeletei like this do more work like this
ReplyDeleteபயனுள்ள தளம் நண்பரே
ReplyDelete